காதல் என்பது பேசாமல்
புரிந்து கொள்வது அல்ல
உணர்ச்சியை உயிரோடு அனுபவிப்பது
மழை துளி விழும் போது கூட
அவளின் தொடுதல் நினைவாகும்
அருகில் நிற்கும் போது கூட
தொட்டுவிட முடியாத
நெருப்பு அது
நீ நினைக்க
மறந்தாலும்
உன் கண்கள்
நினைவூட்டும்
விழிகளுக்குள்
இருப்பது நானல்லவா
நீ உச்சரித்த பின் தான் தெரிந்தது
என் பெயர் இத்தனை அழகு என்பதே
தொடுதலின் மெல்லிய அதிர்வில்
ஆயிரம் உணர்வுகள் புயலாகின்றன
இதயம் தேடும் பாசம்
சுமைகள் கூட
மலராக மாறும் அளவிற்கு
மென்மையைக் கொண்டது
என் அத்தனை
நம்பிக்கையும்
நீ என்ற
வார்த்தை மட்டுமே
பல வே(லை)ளைகளில்
நீயெனை மறந்திருந்தாலும்
எந்நொடியிலும்
நினைத்திருப்பது நானுனையே
நினைவுகளுக்கே
உயிர் ஊட்டும்
உணர்ச்சி தான் காதல்
💖 பக்கம் 98 / 478
📋 Copied