💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தோலில் உரசும் விரல்
மின்சாரம் பாயும்
சுகத்தை தருகிறது
content_copy
மூச்சு தடுமாறும் அந்த தூரம்
உடலின் புயலை கிளப்புகிறது
content_copy
மழைத் துளி கன்னத்தில்
விழுவது போல
காதலின் நினைவு
இதயத்தில் விழுந்தால்
நெஞ்சம் மலர்ந்து விடும்
content_copy
வண்ணம்
மாறா மயிலிறகாய்
எண்ணமெல்லாம்
நிறைந்து விட்டாய்
வருடியே
மனதை நினைவால்
content_copy
இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பிலும் உன் ஞாபகங்கள்
கலந்திருக்க நீ தொலைவில்
இருந்தாலும் என் நினைவுகளில்
என்றும் பக்கம் தான்
content_copy
உன் அன்பின்
ஆழத்தை உணரத்தான்
இத்தனை தொலைவோ
நமக்கிடையில் அன்பே
content_copy
சேலை மடிப்பில்
விளையாடும்
உன் விரல்களிலும்
நாத இசை
வீணை மீட்டாமலேயே
content_copy
பார்வை மோதிய நொடியில்
மனம் சொற்களை மறந்தது
content_copy
இதயம் ஒரு பக்கம் துடிக்கிறது
அந்த பக்கம் அவளது
நினைவு நிறைந்தது
content_copy
சுவை இருந்தும்
பருக முடியாத
ஆறிய தேநீராய்
மனம் அருகில்
நீ இல்லாததால்
💖 பக்கம் 97 / 478
arrow_back
arrow_forward
📋 Copied