கண்ணோட்டம்தான்
தொடக்கமாக இருந்தாலும்
உள்ளத்தோடு பேசுதே
காதலின் உண்மை

என் தனிமை என்பது
யாருமில்லாத போது அல்ல
நீ இல்லாத போது

வரும் ஜென்மத்திலும்
துணை நீயே
என்றால்
இருப்பேன்
தவம் நானும்

உன் காதலில்
நான் காணும்
ஒவ்வொரு நிமிடமும்
என் இதயத்தின்
இசை அதிகரிக்கிறது

இதயத்தின்
சின்ன ஓசை கூட
காதலின் இசையாக மாறுகிறது

தொலை தூரத்தில்
இருந்தாலும் தொலைந்து
போகாத காதல் தான்
உண்மையான காதல்

மழை
நின்ற பின்னும்
இலையில்
ஒட்டியிருக்கும்
நீர் துளிகளாய்
நீ சென்ற
பின்னும்
மனதை நனைக்கின்றது
நினைவு துளிகள்

எப்படி எழுதினாலும்
ரசிக்கின்றாய்
இதழ்வரி கவிதையை

உனை நினைவூட்டும்
அனைத்தும் எனக்கு
நம் காதல்
சின்னங்களே
துளிர்விடும்

உடல் சுகம் ஒரு கணம்
ஆன்மா தொடர்பு ஒரு ஆயுள்