இனிமையாய் இம்சிக்கும்
உன் நினைவோசையின்
முன் சலங்கை ஒலிகூட
வெறும் இரைச்சல் தான்
என் மனதுக்கு
உன்னில் என்னை
தொலைத்தத் தருணம்
என்றுமே மீளக்கூடாதத் தருணம்
விட்டு விட்டு
துடிக்கும்
இடை வெளியையும்
நிரப்பி விடுகிறாய்
அன்பின் நேசத்தால்
இதயத்தை
மௌனத்தில் சேரும்
மூச்சுகள் தான்
ஆழமான
ரொமாண்டிக்கான மொழி
யாருமற்ற சாலையில்
உடன் பயணிக்கிறது
உன் நினைவுகள்
மட்டும் பேரிறைச்சலுடன்
இதயத்தின் கதவைத் திறந்தவன்
அதில் நிரந்தர வாசி ஆகிவிடுவான்
எனக்குக் கிடைத்த
மிகச் சிறந்த பரிசு
உன் இதயத்தில்
எனக்குக் கிடைத்த இடம்
மறைக்க முடியாத ஆசை
இரவின் இருளில் கனவுகளுக்குள்
வெப்பமாக நுழைந்து
உயிரை கிளரச் செய்கிறது
பாசம் காட்ட
பல உறவுகள்
எனை சுற்றிருந்தாலும்
என்னிதயத்தை
அலங்கரிப்பது
பட்டாம்பூச்சியாய்
நீயே
மொழிகள் பேசாமல்
இருகண்கள் பேசும் நேரம்
உண்மையான நேசத்தின் சிறப்பு
💖 பக்கம் 96 / 478
📋 Copied