நீ கோர்த்து
விட்ட மோதிரத்தில்
பூத்து குலுங்குது
நம் காதல்
நீ கோர்த்து
விட்ட மோதிரத்தில்
பூத்து குலுங்குது
நம் காதல்
இத்தனை அராஜகம்
எதற்கு அன்பாய்
ஒரு பார்வையை
வீசியிருந்தாலே
அடிமையாய்
வீழ்ந்து கிடப்பேனே
உன்னிடத்தில்
உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்
எந்த பக்கத்தை
புரட்டினாலும்
உந்தன் ஞாபகமே
மன ஏட்டில்
உணர்ந்த தனிமை
உணராத வெறுமை
நடுவே சிக்கித் தவிக்குது
உன் நினைவெனும் அருமை
விழிகள் பேசும் நிமிடம்
உள்ளம் தவிக்கும் நேரம்
தனிமை இரவானது
கற்பனை உறவானது
கவிதை அணைப்பானது
உறக்கம் துறவானது
உன் நினைவுகள்
வரமானது
உன்னால் செய்தேன்
என்பதை விட
உனக்காக செய்தேன்
என்பது தான்
உச்சக்கட்ட மகிழ்ச்சி
மற்றவர்கள் பொறாமை
கொள்ளும் அளவிற்கு
உன்னை காதல்
செய்திட வேண்டும்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் கள்வா
கண்களை மூடும்போதெல்லாம் நீ
கனவுகளைத் தாண்டி
உணர்வாக நழுவுகிறாய்