தவிக்கவிடும்
தனிமையும்
உணர்த்துகிறது
உன் நெருக்கத்தை...

மௌனத்தில் பிறக்கும் மூச்சுகளுக்கு
மொழிபெயர்ப்பு தேவைப்படாது

நேற்று பார்த்த
எதுவும் இன்று
புதிதாயில்லை
உன்னைத்தவிர

வென்று விடு
இல்லையேல்
எனை
கொன்று விடு
காதல் களத்தில்

எப்போதும்
என் ராட்சஷனாகவே
இருந்து விடு
எனை காதலித்தே
கொல்லும்

சுவாசம் கூட
சேர்ந்து இருக்க வேண்டும்
போலத் தோன்றும்
அந்த நெருக்கம் காதல் அல்லவா?

விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்...

ஏதோ
ஒரு நினைவு
விழிகளை
நனைக்கும்
போதெல்லாம்
புன்னகையுடனேயே
கடந்துவிடுகின்றேன்
அந்நொடியை

நிமிடம் ஒன்றில்
தொடங்கிய உரையாடல்
வாழ்நாள் உறவாகி விட்டது

நினைப்பதில்லை
என்று வருந்தாதே
என் நாழிகை நகர்ந்து
கொண்டிருப்பது
நம் அழகிய
நினைவுகளில் தானன்பே