மழையில் நனைந்த தேகம் போல
ஆசை எப்போதும்
அவளில் தேங்கியிருக்கிறது
மழையில் நனைந்த தேகம் போல
ஆசை எப்போதும்
அவளில் தேங்கியிருக்கிறது
பாசத்தின் மெளனம்
சில சமயங்களில்
சொற்களைக் காட்டிலும்
பெரிதாக உரையாடும்
தொடுவேன் என்று நினைக்கையில்
விரல் நடுங்கும்
அதுவே தீவிர ரொமான்ஸ்
உன் பார்வை
எனை தீண்டாதெனில்
என்னுள்ளமும்
ஒளியிழந்த விளக்கே
உறங்காமல்
அடம் பிடிக்குது
கண்களும்
உனை காண
வேண்டும் என்று
கொடுத்து
செல்கிறேன்
இதயத்தை
எடுத்து வா
காதலிருந்தால்
என் மீது
அருகில் வந்த
ஒவ்வொரு நொடியும்
மூச்சை தடுத்த காமம் கதறுகிறது
ரசிப்பது உன் கண்கள் என்றால்
எழுதுவது என் கைகள் அல்லவா
நிறைய கொஞ்சல்களும்
கொஞ்சம் கெஞ்சல்களும்
சேர்ந்தது தான் கணவன்
மனைவி உறவு
எண்ணத்து ஆசையை
கன்னத்தில் பதித்தேன்
இருவரி கவிதையாக