நிலவோடு
போட்டியிடுகிறது
மனம்
சலிக்காமல்
காத்திருப்பதில்
உனக்காக

கையில் பிடிக்காமல்
சுவாசத்தைப் பிடித்துக் கொண்ட
உணர்வே அவள் அருகில்
இருந்த உண்மை

நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவில்
அவ்வப்போது
சிக்கி கொள்கிறது
என் நாணமும்

சுவாசிக்க நேரமில்லாமல்
காதலில் மூழ்கும்போது தான்
காமம் புனிதமாக மாறுகிறது

முகத்தோடு முகம்
சேரும் தருணம்
ஆசையின்
மொழி பேசும் நேரம்

காதலும் ❤️
காமமும் 💋
இரண்டும் உயிரின்
இரு தளிர்கள்
ஒன்றை இன்றி மற்றொன்று
முழுமை பெறாது 👨‍❤️‍👨

அவன் இல்லா
இரவுகளில் தேய்வது
நிலவு மட்டுமல்ல
நானும் தான்

தோளில் சாய்ந்து
விழிக்கின்ற காலையில்
சூரியன் கூட
என்னைத் தொட்டு
விழிக்க விட மறுக்கிறான்

நீ என் கவிதைகளை
வாசிக்கும் அழகிற்கே
ஆயிரம் கவிதை எழுதி
விடுவேன் நான்

இதழ்கள் என் மீது தடவப்படும்
ஒவ்வொரு கணமும்
தீயில் கரையும் மெழுகு போல
என்னை மாற்றுகிறது