புன்னகை தொட்ட இடத்தில்
வாழ்க்கை வேரூன்றுகிறது
கனவில் மட்டும்
வருவாய் என்று நினைத்தவள்
கண்களை மூடச் சொல்லவைத்தாள்
பார்வைத்தீண்டல்
பரவசம்தான் என்றாலும்
அருகருகே இருக்கும் போது
அதிகமாய் துடிக்கிறது இதயம்
விழிகளை சற்றே
விலக்கிக்கொள்ளேன்
நிமிடங்களில் பிறந்து
வாழ்நாளெல்லாம் நினைவாக
நிற்பது காதல்
உன்னைக் காணாத ஒரு நாள்
என் கண்களுக்கு இரவாகிறது
தன்னைக் காட்டிக்கொள்ளாமல்
பூப்போல் மலர்கிற
காதல் தான் ஆழமுடையது
எல்லோருக்குள்ளும் இருக்கிறது
ஏதோ ஒரு
தீராத தேடலும்
முடியாத காத்திருப்பும்
சிறிய நினைவுகள் கூட
பெரிய புன்னகையை உருவாக்கும்
தூரம் இருந்தாலும் நினைவுகள்
நெருக்கத்தைத் தாண்டும்
உன்னோடு உரையாட
சேர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம் உளறி
நிலவோடு
ஒரு ஒத்திகை
நீ வரும்
வரை
💖 பக்கம் 83 / 478
📋 Copied