இரு விழி
கவி எழுத
வீழ்ந்தேன்
உன் இதயத்தில்
வாழ்ந்திட வேண்டும்
உன் கண்களுக்குள்
நானும் நாளும்
பார்க்கும் இடமெல்லாம்
துளிர்கிறது
உன் நேசம்
பேரன்பின்
பெருங் காதலாய்
பல மாயங்கள்
செய்கின்றாய்
விழிகளுக்குள்....
மாயக் கண்ணனாய்
நீ உடன்
பயணிக்கும்
நொடிகளை போல்
வேறெதுவும்
எனை மகிழ்விக்காது
என்னவனே
எப்பொழுது வருவாய்
என்ற கேள்வியிலேயே
தொங்கி நிற்கிறது
சீக்கிரம் வந்துவிடு
என்ற எதிர்பார்ப்பு
உதட்டின் அருகே
நிற்கும் தருணம்
நேரத்தை நிறுத்தும்
வலிமை கொண்டது
மௌனத்தில் தொடும் விரல்கள்
வார்த்தைகள் பேசாமல் சொல்கின்றன
வார்த்தைகள் இல்லாமலும்
சில உறவுகள்
பேசிக்கொண்டே தான்
இருக்கின்றன
உறங்கும் பொழுதும்
உறங்கா நிஜம்தான்
காதல் நினைவுகள்
💖 பக்கம் 84 / 478
📋 Copied