உன் கண்களில்
எனக்கான இடம்
பார்த்தபோதே
என் இதயம்
உன் வசம் சிக்கியது
சாலையோர
நடைப்பயிற்சியில்
காலைநேர
தென்றலாய் நீ...
திணறடிக்கும்
உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின்
கடைசி நொடிவரை
ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்
என்னை நேசித்தவர்களை நான்
அழவைத்தது இல்லை நான்
நேசித்தவர்கள் தான்
என்னை அழவைக்கிறார்கள்
தினமும்
நிழலாய் தொடர்கிறேன்
நீ என் ஒளி
என நினைத்து
இருளில் கூட
ஒளி தந்தது காதல் அல்ல
தீண்டாமலே எரிந்த ஆசை தான்
மறைக்க முடியாத விருப்பம்
இரவின் இருளில்
கனவுகளுக்குள் தீப்பொறிகளாக
நுழைந்து இதயத்தை எரிக்கிறது
சுவாசத்தில் கலந்து
பயணம் செய்கிறாள்
பிரிவும் காதலாகவே கசக்கும்
சூடான பார்வைகள்
மௌனமான அணைதல்கள்
இதுதான் வார்த்தைகளற்ற ஆசை
மனதின் ஒவ்வொரு துடிப்பிலும்
ஒரே ஒரு பெயர் உறைவதுதான்
உணர்வின் ஆழம்
💖 பக்கம் 82 / 478
📋 Copied