நீ சென்ற பின்னே
நானும் பயணிக்கின்றேன்
உன் நினைவுகளோடு
மன பாதையில்

சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும்
சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும்
இடைப்பட்ட உணர்வே காதல்

யாரோ இருவர்
கரங்களை கோர்த்தபடி
எனை கடக்கயில்
நாமிணைந்து
பயணித்த பயணங்கள்
தொடர்கிறது
என் மனதிலும்

பிடித்த
தனிமையும்
கொடுமையானது
உன்னுள்
தொலைந்ததிலிருந்து

வண்ணங்கள் கலையாத
வானவில் நீ
என் மன வானில்

நேரம் நின்று போனதுபோல்
உணர்வு கொள்ளும் அந்த நொடி
ரொமான்ஸ் அதுவே

மனதை கொள்ளை கொள்ளும்
வார்த்தைகளில் காதல் இல்லை
உணர்வுகளை புரிந்துகொள்ளும்
மனதில் மட்டுமே உள்ளது

மறைக்க முயன்ற உணர்வுகள்
ஒரு பார்வையில்
வெளிவந்து விடும்

தொலைதூரம் நீ
சென்றாலும் வெகுதூரம்
உன்னை காதலிப்பேன்

கண்களுக்கு அருகில்
இருப்பனத விட
இதயத்திற்கு அருகில்
இருப்பது நான் காதல்