பார்வைகள் பேசும் போது
காதல் ஏற்கனவே
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
பார்வைகள் பேசும் போது
காதல் ஏற்கனவே
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
படிக்கும் எதுவும்
பதிய வில்லை
மனதில் கண்கள்
உனையே வாசிப்பதால்
கனவுகளை காட்டும் கண்கள்
நிஜத்தை விட
உண்மையாக இருக்கும்
ஒரு இரவில்
மின்னும் நிலவு போல
காதலியின் சிரிப்பு
உள்ளத்தைக் கொளுத்தும்
நெஞ்சின் துடிப்பு வேகம்
காமத்தின் மொழியாகிறது
பார்க்க
மறுத்த விழிகளும்
காத்துக்கிடக்கு உன்னன்பில்
தொலைந்து...!
காதல் ஒரு இசை போன்றது
உன் இதயம் தாளமாய்ப் போக
என் உணர்வுகள் பாடலாக மாறும்
மௌனம் கையுடன் சேரும் போது
அது ஒரு உரையாடலாக மாறும்
துடிப்புக்கு முன்னே பிறந்தவள்
நெஞ்சில் காதலாகவே
இருக்க வேண்டும்
மென்மையான தொடுகை
என் உள்ளத்திலேயே
ஒரு தீயாக எரிகிறது