தொடாமல் அழைக்கும் பார்வை
தொடும்போது உருகும்
ஆவலுக்கு ஓர் விளக்கம் இல்லை
தொடாமல் அழைக்கும் பார்வை
தொடும்போது உருகும்
ஆவலுக்கு ஓர் விளக்கம் இல்லை
ஆசையாய் கோர்த்து
சூடிக் கொள்கிறேன்
உதிர்ந்தாலும்
மகிழ்வே
உன்னணைப்பில்
முடிவில்லா பாதையில் கூட
காதல் ஒருவரை விடாமல் சேர்த்துவிடும்
உன்னிடம்
கற்று கொண்டதை
கற்று தெளிகிறேன்
இப்படி
வெட்க படுகிறாயே
காதல் கணவா
வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்
உரையாடலை வேண்டாமென்று
சொல்லும் மௌனமும்
காதலின் தீவிர ஆசையை சொல்கிறது
அவன் தரும் பரிசுகளில்
என்றும் நான் விரும்புவது
காதலுடன் அவன்
வைத்து விடும்
ஒரு முழப் பூவே
காற்றின் தாளத்தில்
கலந்து வரும் நெருக்கம்
கனவாக மாறுகிறது
மின்னல் போல
தொடும் அணைப்பு
அந்த அனுபவம்
வாழ்நாள் முழுவதும் எரியும்
நீ இல்லாத
தருணங்கள் கூட
தனிமை என்பதை
யான் அறியேன்
அப்போது
உன் நினைவுகளில்
நான் மூழ்கியிருப்பேன்