கண்களில் பரிகாசம் இல்லாமல்
காண்பதற்கே காதல் திறக்கும் வாசல்
கண்களில் பரிகாசம் இல்லாமல்
காண்பதற்கே காதல் திறக்கும் வாசல்
மௌனம் எப்போது
காதலின் மொழியாகிறது தெரியுமா?
கையில் விரல்கள் பின்னியபோது
நெருக்கத்தில் ஓர் அமைதி
அந்த அமைதியில் தான்
காதலின் ஆழம்
உன்னை காணாமல் நான்
வருந்தி கவிதைகள் எழுதினேன்
ஆனால் கவிதைகளில் உள்ள
வார்த்தைகளோ உன் அழகு
காணாமல் வருந்துகிறது
நெருக்கத்தில் நேரம் மறைந்து
சுவாசத்தில் காதல் கரைகிறது
மௌனமாக அணைத்துக்கொள்ளும்
காதலின் சூடே
வார்த்தைகளால்
வெளிக்கொணர முடியாத உணர்வு
அசைபோடும்
உன் நினைவில்
அசைவற்று
காத்திருக்கு
விழிகள்
நீ வருவாயென
என்
எண்ணம்
நீயாகிப்போக
எழுதுகோலும்
கிறுக்குகின்றது
ஓய்வின்றி
மையலை மையில்
கலந்து கவிதையாக
உலகம் முழுதும் மறைந்தாலும்
என் இதயத்தின் இடுக்கில்
நீ என்றும் ஒளிவழி
என்ன வரம் பெற்றதோ
அந்நீர்த் துளிகள் உன் மீது
பட்டு உன் தேகத்தில்
முத்த ஊர்வலம் நடத்த