இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பிலும் உன் ஞாபகங்கள்
கலந்திருக்க நீ தொலைவில்
இருந்தாலும் என் நினைவுகளில்
என்றும் பக்கம் தான்

உயிரோட இருக்கும் போதே
நடைப்பிணமாக வாழ
கற்றுக்கொடுத்த உன்
அன்பிற்க்கு மிக்க நன்றி

பூவில் தேன்
எவ்வளவு இருக்கிறதோ
அந்த அளவுக்கே
என் மனதில் அவளுக்கான இடம்

மொழியில் பேசிடு
விழியில் பேசி
வீழ்த்தாதே

நொடியில் துடிக்கும் இதயம்
காதலில் என்றைக்கும் வாழ்கிறது

என்னையும் என்
உலகத்தையும் முழுவதுமாக
திருடிச்சென்றவள் நீ

காதல் என்பது
காலத்தை முறித்து
நம் இருவரையும்
ஒன்றாக பின்னும் தேன் நூல்

கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்த்து
ரசிக்கின்றேன்
வந்தது நீயல்லவா
கண்களுக்குள்

நம்மை உண்மையாக
நேசிப்பவர்களுக்காக
நம்மை நாம் மாற்றி கொள்வதில்
தவறு ஒன்றும் இல்லை

கண்கள் பேசும்போது
வார்த்தைகள்
வாடை போலவே மாயமாகும்