அணைப்பின் சூடு
இரவின் இருளையும்
உருகச் செய்கிறது
வண்ணமாய்
மனதில் நுழைந்து
வான வில்லாயாய்
மறைந்து செல்கிறாய்
பார்வையிலிருந்து
உனைக் காணும்
போதெல்லாம்
எனைத் தென்றல்
தீண்டுகிறது
உன் பார்வையோ
உன் சுவாசமோ
என நான் அறியேன்!
கோர்த்த வார்த்தைகளை
சேர்க்கும்முன்
கொட்டித் தின்கிறது
வெட்கம்
பார்வை சேரும் தருணம்
இதயத்துக்குள் புது உலகம் மலர்க்கிறது
காதல் ஒரு மெழுகுவர்த்தி போல
தீ கொளுத்தினால் கருகும்
ஆனால் அதன் ஒளியில்
இருவரும் பிரகாசிப்பார்கள்
தந்தையின் பாசத்தில்
தவழ்ந்த மனம்
உன்னிடமும்
அதையே
எதிர் பார்க்கின்றது
சிறு குழந்தையை
போல்
வார்த்தை பேசாத
ஓர் புன்னகை
ஆசையை அலையாக்கும்
அர்த்தம்
உன் கனவின் மெல்லிசையில்
நான் உறங்கினேன்
என் வாழ்கையின்
மறக்க முடியாத
உணர்வு ஆகிவிட்டாய்
அருகிலில்லா
தருணங்களிலும்
இருப்பதாய்
மாயம் செய்கிறாய்
என்னில் ஆழ்ந்து
உன் காதலால்
💖 பக்கம் 71 / 478
📋 Copied