புகையாய் சூழ்ந்து
தீயாய் எரிக்கிறது
உன் நினைவு தணல்
எப்போதாவது நினைத்து பார்ப்பாயா
என்று தெரியவில்லை என்னை
எப்போதுமே நினைத்தபடியே
இருக்கிறோன் நான் உன்னை
எண்ணம் போல்
வாழ்க்கை
வண்ணமாய் உன்னால்
இதயத்தின் துடிப்பு கூட
அவளை நினைக்கும் இசை
அரை நொடி வாழ்ந்தாலும்
போதுமடி உன் அரவணைப்பில்
நான் வாழ வேண்டும்
அடுத்த நொடியே மரணம்
வந்தாலும் சுகமாய் ஏற்பேன்
காதல் பரிமாறும் அமைதி
சோர்வான மனதிற்கு
ஓர் இனிய தாலாட்டு
உணர்வுகளை
வார்த்தைகள் சொல்லமுடியாது
அவை மெதுவாக
காதலியின் உதட்டில் உருகும்
பார்வை தொட்ட
அந்த நொடி
உலகம் மறைந்தது
ஒரு நினைவு மட்டும் போதும்
நாள் முழுவதும் மனம் ஒளிர
மனதில் கிளுகிளுக்கும் ஆசை
மெளனமான இரவுகளில்
காதலை தீவிரமாக்கும்
💖 பக்கம் 73 / 478
📋 Copied