சத்தமின்றி
யுத்தம் செய்யும்
உன் பார்வையில்
ரத்தமின்றி
போர்க்களமானது
மனம்...!

நினைத்துக் கொள்ளவது
கூட ஒரு வகையான
சந்திப்பு தான்

புதிதாய் உணவு
நீ சமைக்க
காதலோடு நானும் அதை ருசிக்க
அறுசுவையில் ஒன்று
கூடிப்போனது உன்னால்

மழை போல நீ வந்தாய்
உன் நினைவுகள் நனைத்தும்
என் இதயம்
சுத்தமாய் மலர்கிறது

வாடிய மலரைப்போல்
உயிறற்று கிடக்குறது
வாசிக்க நீயின்றி வரிகள்...

உலகில் உள்ள அனைத்து
பூக்களின் வாசங்களும்
சற்று குறைவு தான்
உன் கூந்தல் சூடி பின்
வாடிப்போன அந்தப்
பூக்களின் வாசத்தின் முன்

காதல் என்பது மழை போல
ஒரு முறை விழுந்தால்
அது மனதின்
ஆழங்களை நனைத்துவிடும்

நீ உச்சரித்த
பின் தான் தெரிந்தது
என் பெயர்
இத்தனை அழகு என்பதே

ஆழமாய் காதலித்தேன்
என்று தெரியும்
அதைவிட அதிகமாய்
நோகடித்தேன்
என்று புரியவில்லை

மௌனத்தில் வீசும் சுவாசம் கூட
காதல் கவிதையைப் போல் இருந்தது