உனக்காக வாழ
ஆரம்பித்து விட்டேன்
என் வாழ்க்கையே நீயென்று
உணர்ந்து விட்டதால்
அடி என்னவளே!
வழி தெரியாமல்
தவிக்கிறேன் உன்
உயர கூந்தலில்
சிக்கிக்கொண்டு
உன்னோட பேசுற
ஒவ்வொரு நாளும்
புதுசான கதை கிடைக்காது
ஆனாலும் அதே மனிதரிடம்
மறுநாளும் பேசணும்னு
தோணுறதுதான் காதல்
நீ எப்போது
தென்றலானாய்
தீண்டும் காற்றிலும்
உன் ஸ்பரிசமே
நான் சரியில்லை
என்று சொல்லாமலேயே
அது தெரிந்து கொள்ளும்
இதயம் நீ
கண் மூளும் தருணத்திலும்
அருகிலிருக்கும்
நபரின் சுவாசம் மட்டுமே
உணரப்படுகிறது
காதல் ஒரு வார்த்தை இல்லை
அது மூச்சில் கலந்த
மௌன உரையாடல்
மனதில் மலர்ந்து கொண்டே
இருக்கும் பூவே காதல்
மெதுவாக நடக்கும்போதுதான்
காதல் மனதிற்குள்
ஓடத் தொடங்குகிறது
கை பிடிக்கவும்
அணைத்துக் கொள்ளவும்
நீயிருக்கும் போது
எவ்வளவு இருள் சூழ்ந்தாலும்
எனக்கென்ன அன்பே
💖 பக்கம் 68 / 493
📋 Copied