உன்னைக் காதலிக்க
ஆரம்பித்த நாளிலிருந்து
என் உலகமே புதிதாக மாறிவிட்டது

அளவுக்கு மேலாக
அவளை ரசிப்பதும்
இம்சைதான்
இதழ் முத்தம் இடாமல்

சிரிப்பின் பின்னால்
ஒளிந்திருக்கும் ஆசைதான்
உண்மையான காதல்

உன்னிதழ்
சுவைத்த தேனீர்
என்னிதழை
நனைக்க கரைந்தது
ஊடலும்

மறக்க முடியாத இடத்தில்
நீயும்வெறுக்க முடியாத
இடத்தில் நானும்
இருக்கும் வரை
எதோ ஒரு ஓரத்தில்
வாழ்த்துக் கொண்டே
இருக்கும் நாம் காதல்

கணவன் மனைவி
காதல் என்பது
கட்டிப் பிடிப்பதிலும்
முத்தம் கொடுப்பதிலும்
மட்டும் இல்லை

உன் காதல்
எனக்கு சொந்தமானது
என்று நினைக்கும்
ஒவ்வொரு கணமும்
வாழ்க்கையின்
மிகப்பெரிய சுகம்

உன்னிடத்தில் நான்
என்னவாக இருந்தாலும் பரவாயில்லை
ஆனால் உன்னிடம் இல்லாத
ஒரு நாளும் எனக்கு வேண்டாம்

மூச்சு காற்றின்
வெப்பத்தில்
மூட்டுகிறாய்
ஆசை தீயை

ஒரு வலுவான கணவன்
மனைவி உறவு நேர்மை
நம்பிக்கை மற்றும்
மரியாதை ஆகியவற்றின்
அடிப்படையில்
கட்டமைக்கப்பட்டுள்ளது