உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
கடிகார முள் கூட
என் இதயத்தை கிழிக்கிறது

பார்வையில் மறைந்திருக்கும் ஆசை
இதய துடிப்பை வேகமாக்குகிறது

இதழ்களின் ஓரம்
துளிர்க்கும் புன்னகை
வாழ்வின்
முழு கதையாக மாறிவிட்டது

காத்திருந்த தவிப்பெல்லாம்
காதலாகி கண்களையும்
மறைக்குது நாணம்
நீ கண்ணெதிரே வர

பார்வை தொட்டதிலே
மனசு பூத்தது
ஒரு வார்த்தை இல்லாமலே
காதல் முழுமை ஆனது

காற்று தீண்ட
சாயும் நாணலாய்
சாய்கிறேன் நானும்
உன் கண்கள்
காதலாய் தீண்ட
நாணத்தில்

பல வே(லை)ளைகளில்
நீயெனை மறந்திருந்தாலும்
எந்நொடியிலும்
நினைத்திருப்பது நானுனையே

கடலுக்கு ஓசையாய்
மனதுக்கு வீணை நீ
இதய ராகமாய்

அருகில் இல்லாததால்தான்
ஒவ்வொரு நினைவும்
தீக் கனலாய் நெஞ்சை உருக்கிறது

மறுத்திட முடியாமலும்
தெரிவிக்க தெரியாமலும்
எனக்குள்ளே மையல்
கொண்டுள்ளது உனக்கான
என் தூரத்து நேசங்கள்