யாரின் மௌனமும்
எனை தனிமை
படுத்தியதில்லை
உன் மௌனத்தை
போல்
தடவுதலின் மென்மை
காற்றிலும் மின்னல்
பார்வையிலும் இருந்தது
மழையில் நனைந்த
மெல்லிசை போல
அவளது அருகில் இருப்பது
மயிலிறகாய்
உன் நினைவு
மனதை வருட
மறந்தே போகிறேன்
என்னை...
கொஞ்சமேனும்
கருணை காட்டு
உன் அழைப்புக்காய்
காத்திருக்கும்
என் காதலுக்கு
அன்பே
காத்திருந்த செவிகளுக்கு
விருந்தளித்தது அன்பே
என்ற உன் குரல்
காதல் என்பது
பார்வையில் தொடங்கும்
ஒரு அமைதியான புரட்சி
மனதில் மறைக்க
தெரிந்த எனக்கு
கண்களில்
மறைக்க தெரியவில்லை
உனை ரகசியமாய்
ரசிப்பதை
நிறம் பார்த்து வந்த காதல்
நிரந்தரமானது அல்ல
மனம் பார்த்து வந்த காதலுக்கு
மரணமே இல்லை
நாளை உன்னுடன்
இருக்க வேண்டும்
என்ற எண்ணம்
இன்றைய நாளைக்
கடக்க எனக்கு
வலிமை அளிக்கிறது
💖 பக்கம் 6 / 478
📋 Copied