பேச்சு இல்லாத நேரங்களில்தான்
உண்மையான காதல் உருவாகிறது

காதல் என்பது
இரு இதயங்கள்
இசையும் ஒரு அலை
அதில் யாரேனும்
பின்னடைவு அடைந்தாலும்
அந்த இசை நிறைவடையாது

இருவரும் பேசாத நேரங்களில் கூட
காதல் வளர்ந்து கொண்டே இருந்தது

நீயிருக்கும் இடம்
வெப்பமான நிலம்
அங்கே என் உயிர்
ஒவ்வொரு முறை புதிதாக பூக்கும்

சோம்பல் முறிக்க
எழும் புத்துணர்ச்சியாய்
உன் நினைவு
தொற்றி கொள்ள
மனமும்

என்னிதயம்
துடிக்க
உன் நினைவு
போதும்...

நெருக்கமின்றி காதலிக்க முடியும்
ஆனால் நெருக்கத்துடன்
காதல் நதியாய் ஓடும்

காத்திருப்பும்
சுகமே
உன் வரவுக்காக
என்பதால்

சூடான தேனீர்
பருகியபோதும்
மனதை சில்லென
நினைகிறாய்
மார்கழி குளிராய்
நினைவை தூதனுப்பி

காதல் நட்சத்திரம் போல
தொலைவில் இருந்தாலும்
வழி காட்டுகிறது