சில தொடுதல்களுக்கு
வார்த்தைகள் தேவையில்லை
ஒரே மூச்சு போதும்
சில தொடுதல்களுக்கு
வார்த்தைகள் தேவையில்லை
ஒரே மூச்சு போதும்
பொய்யுரைக்கா
உன் விழிகளை
கண்டு
மையும் கரைகிறது
சந்தோஷ துளிகளாய்
உன்னில் தொலைந்ததால்
நானும் நலமாக
நாமாய் என்னுள்
வலிகளில் மீட்டு
வழிகளாகிறாய்
நம்பிக்கையை
கொடுத்து
மௌனத்தில் பேசும்
ஒருவர் இருந்தால்
அந்த நேசம் உண்மைதான்
அங்கே
நீ இங்கே
நான் நமக்கான
இடைவெளியில்
அழகாய்
பயணிக்கிறது
நம் காதல்
தடையின்றி
பாசத்தைப் பொழிய
பலர் இருப்பினும்
மனம் களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
என்னவோ உன்
மடியைத்தானடா
விரல்கள் தேடும் பாதை
ஆசையின் தீயை நெருப்பாக்கும்
மிக அழகானது
சிலரின் நினைவுகள்
தென்றல் தழுவும்
தீண்டலின் உணர்வாய்
காதல் பிறக்கிறது