💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
புன்னகையிலிருந்து தொடங்கிய பயணம்
இதயத்தின் அடுக்கு அடுக்காய்
ஆழமாகி விடுகிறது
content_copy
எத்தனை மைல் தூரம்
நீ இருந்தாலும்
எந்தன் மனதை
சிறைப் பிடித்தவன் நீயே
content_copy
மௌன பார்வை மட்டும் போதும்
ஆசை நொடிகளை
கணக்கிலேயே தொலைக்கிறது
content_copy
காதல் என்பது
காலத்தை முறித்து
நம் இருவரையும்
ஒன்றாக பின்னும் தேன் நூல்
content_copy
மௌனத்தில் கூட
காதலின் ஓசைகள் கேட்கும்
அதற்கு இரண்டு இதயங்கள்
மட்டும் போதும்
content_copy
மணிக்கணக்காய்
பேச வேண்டும்
என்ற எண்ணமில்லை
நீ பேசினால்
மணித்தியாலங்கள்
கரைவது கூட
தெரிவதில்லை
content_copy
உன்னைக்
காணாத பொழுதெல்லாம்
பார்வை இழக்கிறேன்
நான்
content_copy
சிறுகச் சிறுக
சருகாய் உதிர்ந்தாலும்
உயிரின் கடைசி
துளிவரை
உன் நினைவே
நிறைந்திருக்கும்
என்னில் என்னன்பே
content_copy
தழுவலில் உருகும் உடல்
இரவின் இரகசியத்தை
வெளிப்படுத்துகிறது
content_copy
இதயத்தில் மெதுவாக
இடம் பிடிப்பவரே
வாழ்வை முழுவதும்
மாற்றிவிடுகிறார்
💖 பக்கம் 60 / 478
arrow_back
arrow_forward
📋 Copied