ஆசைக்காக காதலித்து
இருந்தால் எவளோ ஒருத்தி
என்று விட்டிருப்பேன்
வாழ்க்கைக்காக காதலித்தேன்
அதனால் தான் இன்னமும்
வலிக்கிறது என் இதயம்

குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்
காதலர் தின வாழ்த்துக்கள்

கண்ணோட்டம்தான்
தொடக்கமென்றால்
அதற்குப் பின்னே
உடல் மொழி பேசும்
கதைதான் தொடரும்

உள்ளத்தை ஊடுருவும்
இசையாய் உயிர் வரை
ஊடுருவுகிறது
உன் நினைவிசை
இன்னிசையாய்

தேடல்கள் எல்லாம்
அருகில் இருந்த போது
தொலைக்கப்பட்டவை
எல்லம் நீயே

நிலையான மனம்
தான் இன்று
நிலைக் கொள்ளாமல்
அலை பாயிது
உன் நினைவு மோத

நிலவை போல தொலை
தூரத்தில் இருக்கும்
காதலனுக்காக
மன சோர்வுடன்
காத்திருக்கும் காதலி

பிரம்மை என்றாலும்
பிரமித்து போகிறேன்
காணும் இடங்களில்
எல்லாம் உனை
காணும் போது

காத்திருக்கும் கண்களில்
தேங்கி கிடக்கும்
கனவுகளை உனையன்றி
யாரறிவார் என்னுயிரே

உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே