எனக்காக காத்திருக்கிறாய்
என்ற நினைப்பே
உன்மீதான காதலை
இன்னும்
அதீத வலிமையாக்குது
எனக்காக காத்திருக்கிறாய்
என்ற நினைப்பே
உன்மீதான காதலை
இன்னும்
அதீத வலிமையாக்குது
ஏதேதோ
பேச நினைத்து
மனம் இப்படியே
பார்த்து கொண்டிருந்தால்
போதுமென்று
லயித்துவிட்டது உன்னில்
என் இதயத்தைக் கேட்டால்
அது உன் பெயரையே
மெல்லிசையாக
மெல்லிசையாக உச்சரிக்கும்
என் கண்கள்
உன்னை தேடுவதை நிறுத்தலாம்
ஆனால் என் இதயம் மட்டும்
என்ன செய்வது?
அன்பை கொட்டவும் அக்கறை
காட்டிடவும் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் மனம் ஏங்குவது
என்னவோ விரும்பி சிறைபட்ட
அந்த ஒற்றை இதயத்திடம் மட்டுமே
நேரம் நின்றது
போலத் தோன்றும்
ஒவ்வொரு கணம்
அவள் பார்வையில் சிக்கியதும்
நிமிடங்கள் நீண்ட நெடிய
நினைவுகளாய்
மனதில் மலர்கின்றன
என் பேனா முனை
வரைவதெல்லாம் ஓவியம்
என நினைத்திருந்தேன்
அவை யாவும்
கீறல்களாகவே மாறியது
என் வாழ்வில்
பற்றி கொண்டாய்
கரத்தை
பத்தி கொண்டது
காதல் தீ
பார்வைகளின் உரசலில்
மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்...