உன் வாசனை கூட
என் உணர்வுகளை
அலைக்கழிக்கிறது

ஜன்னலை
தீண்டும் தென்றலாய்
உன்னன்பும்
மனதை தீண்ட
விழிகளும்
தேடுது உன்னை

ஆளும்
உன் காதலில்
நானும்
உன் கைதி தான்
என் ஆயுளெல்லாம்

காயத்தின் வலிகூட
சுகமான காதலாகும்
காயப்படுத்துவது
நீயென்றால்

என்னால் முடிந்த வரை
பயணித்து கொண்டே இருப்பேன்
உன் நினைவுகளுடன்

நெஞ்சில் எழுதப்பட்ட பெயர்
காலம் கிழித்தாலும் அழிவதில்லை

காதல் ஒரு மழை போன்றது
சிலருக்கு நனையத் தூண்டும்
சிலருக்கு வெறும் வெடிக்கும்
மின்னலாக இருக்கும்

என் கடந்த காலத்திலோ
நிகழ் காலத்திலோ நீ
என்னோடு இல்லை
ஆனால் என் எதிர்காலம்
உன்னோடு மட்டும் தான்
காதலர் தின வாழ்த்து என் காதலே

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

வெண்ணிலாவின் ஒளியில்
என் காதல் உன்னை கண்டது