தொட்டும் தொட்டாமலும்
இடையே ஒரு கனிந்த
உணர்வு நிறைந்தது

நீ எங்கு இருந்தாலும்
உன் நினைவுகள்
என் அருகிலேயே இருக்கும்
என் இதயம் எப்போதும்
உன் மடியில் இருப்பதை உணருகிறது

நீயின்றி
என்னுலகம்
நிறைவடையாது...

கண்கள் சொல்ல முடியாததை
உதடுகள் சொல்வதுதான்
உணர்வின் உச்சம்

தூரமது மாயமாய் மறைந்து
உன் விழிகளின் நர்த்தனமதில்
உறைந்து நான் போகும்
நொடிகள் நோக்கி நகர்கிறது
என் கடிகார முட்கள்

இரண்டு விரல்கள்
சேரும் போது
தோன்றும் அதிர்ச்சி
காதலின் வினையெதிர் சக்தி

சிப்பிக்குள்
இருக்கும் முத்தாக
மனதுக்குள்
என்னுள் இருக்கிறாய்

பேச்சு வார்த்தை
இல்லாத போதும் கூட
சிலர் மீதான
அன்பு குறைவதே இல்லை

விரல்கள் சுரண்டிய இடத்தில்
காதல் கவிதை பிறக்கிறது

கிறுக்கலில் கூட
உன் பெயரின்
முதலெழுத்தை தான்
விரல்களும் கோலமிடுகிறது