சொற்கள் தேவையில்லை
பார்வை பேசும் அந்த நொடி
ரொமான்ஸின் உச்சம்
பிழை என்றாலும்
ரசிப்பேன் உனை
நீயென் கவிதையல்லவா
விலகிய போதும்
விரட்டி வந்தே
வீழ்த்தி விட்டாய்
மீள முடியா
அன்பு கடலில்
மனைவிக்கு தன் கணவனும்
கணவனுக்கு தன் மனைவியும்
தான் முதல் குழந்தை
மாலை நேரத்தின்
சிவந்த வானம் போல
இதயத்தின் ஆழத்தில்
பாசம் மெதுவாக பரவுகிறது
நீ தொலைதூரம் சென்றாலும்
தொலைபேசியின் தொடர்பில்லாமல்
இருந்தாலும் தொடர்ந்து தொல்லை
செய்துகொண்டுதான் இருக்கிறாய்
உன் நினைவுகளால்
அழகை விட
அன்பு உணர்த்தும்
கண்கள் தான்
நீண்ட பயணத்தில் தேவை
இமை கதவுகள்
மூடியதும் விழிவீட்டினுள்
நுழைந்துவிடுகிறாய்
கனவாக...
மழை தூறும் நேரத்தில்
இதயம் கூட
மற்றொரு இதயத்தை நினைத்து
நனைந்து உருகுகிறது
பேச நினைத்த வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
💖 பக்கம் 52 / 478
📋 Copied