காதல் இதயத்தில்
எழுதப்படும் கவிதை
ஆனால் அதை படிப்பவர் ஒருவரே
அழைப்பை நீ யெடுக்க
தாமதித்தால் துடிக்குது
அதிகமாய் மனமும்
என்னவோ ஏதோவென்று
இதயத்தின்
சின்ன ஓசை கூட
காதலின் இசையாக மாறுகிறது
மலரும்
நினைவுகள்
மனதை தாலாட்ட
உறங்கிப்போனது
விழிகள்
மௌனமாக பார்த்த
அந்த கண் ஜோடி
ஒரு ராத்திரியை
கவிதையாக்கிவிட்டது
இரு உடல்களின்
இடையே கரைந்த அந்த நொடி
ஆன்மாவின் பசியை தீர்க்கும் விருந்து
உன் அருகாமை மட்டுமல்ல
உன் நினைவுகள் கூட
என் கன்னம் சிவக்க வைக்கிறது
கைகளின் நடுக்கம்
இதயத்தில் எழும் சுருக்கம்
இதுவே ரொமான்ஸ்
என்பதற்கான சாட்சியம்
எத்தனை புயலடித்தாலும்
இதய கதவை எனக்காக
திறந்தே வைத்திருக்கிறாய்
என் மனமறிந்து
அருகில்
நீயிருந்தால்
விடுமுறை
எடுக்கின்றது
வெட்கமும்
💖 பக்கம் 51 / 478
📋 Copied