நேசத்தில் இல்லாத
நெருக்கம்
உன் (சு)வாசத்தில்
வந்தது
யாரோடும்
பயணிக்க பிடிக்கவில்லை
நம் நினைவோடு
பயணிக்க பிடித்திருப்பதால்
பதற்றம் நீங்கியது
இன்னும் பல
கனவுகள் நின்றாடுது
உனைத்தேடி
இரவில் பேசும் கண்கள்
பகலில் எழுத முடியாத
காதலை எழுதும்
அலைப்போல்
துள்ளி எழுந்து
பனிப் போல்
உருகுதே எனதுள்ளம்
உனை கண்டதும்
அத்தனையும்
ஜெயித்து விட்டதாய்
மனம் பட்டென
நீ தோள் சாய
உனக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் ஓரு சுகமே
உயிருக்குள் உன்னை
சுமந்து இருப்பேன்
ஒரு தாய் போல
உலக அதிசயங்கள்
எல்லாம் கல்லால் ஆனவையடி
இல்லையேல் உன்னையும்
சேர்த்திருப்பார்கள்
காதல் என்பது
கண்ணில் தொடங்கும் கனாக்கள்
இதயத்தில் எழுதப்படும் கவிதைகள்
அசைபோடும்
உன் நினைவில்
அசைவற்று
காத்திருக்கு
விழிகள்
நீ வருவாயென
💖 பக்கம் 50 / 478
📋 Copied