உன் நேசத்தின்
நறுமணத்தில்
என் சுவாசமடா
அன்பே

உன் வெட்கம்
எனக்கும்
துணிவை தந்தது
உன்னை ரசிக்க...

கலைத்து விடுகிறேன்
கவலைகளை உடனுக்குடன்
உன் கண்கள்
கலங்கிட கூடாதென்றே
என்னவனே

நினைவுகள்
தோழமையாக நீந்தும்
உன் அன்பு
ஓயாத நதியாக
என்னை நனைக்கிறது

கைகளின் மென்மையான
தொடுதலில்
இரவுகளும் உருகின

புயல் பார்வையில்
சாய்ப்பதும் ஏனடா
உன் தென்றல்
பார்வையே போதுமே
நான் வீழ்ந்திட

பாசத்தின் மேல்
ஆசை ஒரு பூமாலை
மெதுவாக கடந்து
போவது கூட பரவசம்

தட்டிவிட்ட போதும்
ஒட்டிவரும் மணலாய்
மனதை துரத்தும்
உன் நினைவில்
தடுமாறி போகிறேன்
நானும்

நீ விடைபெறும்
போதெல்லாம்
என்னிடம் தாவிக்கொள்கின்றது
சிறு குழந்தையாய்
உன் நினைவுகள்...!

கண்ணோட்டத்தில்
ஆரம்பமான பயணம்
இதயத்தின் எல்லையிலேயே முடிகிறது