நம் கவலைகளை
மறைய வைத்து
நம்மை சிரிக்க வைக்க
உண்மையாக நேசிப்பவர்களால்
தான் முடியும்

உன்னை ஒவ்வொரு நொடியும்
தேடுகிறேன் என்பதை
சொல்ல உன்னிடம்
ஒரு நொடி கிடைக்குமா

தூக்கத்தில் கனவாய் வருவதும்
விழித்தவுடனே நினைவாய்
நிலைத்திருப்பதும்
உண்மையான நெருக்கம்

காதலின்
வெளிபாடுதான்
முத்தமென்றால்
நாமும் பரிமாறிக்கொள்வோம்
முத்தங்களை
விழிகளை இதழ்களாக்கி

மேகத்தினுள்
மறையும் நிலவாய்
அவ்வப்போது மறைந்து
கொல்கிறாய் மனதை

பேசுகின்றது
உன் நினைவும்
கெஞ்சலும்
கொஞ்சலுமாய்
உனைப் போலவே
எனையும் மௌனமாக்கி

கண்ணின் வலியில்
புன்னகை மறைந்தால்
ஆசையின் அடையாளம்
தெளிவாகும்

வான் திரைக்குள்
ஒளிந்து கொண்டாலும்
நிலவொளியின்
துணைக்கொண்டு
உனையடைவேன்
என்னவனே

உன் பார்வை
ஒரு கவிதை
என் இதயம்
அதை ரசிக்கின்ற கவி

உன்
வருகை
தாலாட்டுது
மனதை
மாலைநேர
தென்றலாய்