நீ அணைத்தவுடன்
என் இதயம் உருகும்
ஆனால் உன் முத்தத்தில்
என் ஆத்மாவே எரிகிறது
விழிகளால் பேசும் காதல்
சொல்லாத சொல்லாக
உயிரில் பதிந்தது
உன் கரம்பற்றி
நடக்கையில்
நானும் வழியறியா
குழந்தை தான்
நான் ஆசை
படுவதெதுவும்
நிராசையானதில்லை
உன்னாசைகள்
எனக்காக என்பதால்
வேண்டுதல்கள்
என்று எதுவுமில்லை
உன் தரிசனத்துக்காகவே
அர்ச்சனை
மௌனத்தில் பேசும்
மனதுகளுக்கு
மொழி தேவையில்லை
இதயம் தேடும் பாசம்
அமைதியின் ஆழத்தில்
நிழலாய் வந்து மனதைத் தழுவும்
மெல்லிய சொற்கள் விடும் சுவை
ஆன்மாவை வருடும் பாசம்
நினைவுகளால் மட்டும்
உயிரோடிருக்க வைத்தால்
அது தான்
காதலின் வெற்றிச் சான்று
உன் அணைப்பில் மூச்சு மறக்கிறேன்
உன் முத்தத்தில் உலகமே மறக்கிறேன்
💖 பக்கம் 464 / 478
📋 Copied