நேசிக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை நேசிப்பது
போல் நம்ப வைத்து
ஏமாற்றாமல் இருந்தால்
மட்டும் போதும்
எழுத ஆரம்பிக்கும்
கவிதையின் பொருள்
நீ என்பதாலேயே
அது கவிதை எனவாகின்றது
முற்பிறவியின் பந்தமே
இப்பிறப்பிலும்
நாம் இணைந்தது
உன்னோடு எவ்வளவு நேரம்
கழித்தாலும்
உன்னையே தேடுகிறேன்
நெருக்கம் அதிகரிக்கும் போது
நேரமும் மெதுவாக நடக்கிறது
நினைவு வந்தால் சிரிப்பு
காணாமல் போனால் வலி
வந்த பிறகு
"சரி ஆகும்"
என்ற நம்பிக்கை
எனக்கு பழக்கமாகி விட்டது
சந்திப்பின் சிறு தருணமே
வாழ்நாள் முழுதும்
தாங்கும் நினைவாகிறது
என் நிழலை
தோற்கடிக்கும்
இருளாயல்ல
அந்த நிழலுக்கு
உயிர்கொடுக்கும்
ஒளியாய் நீயே
கரையும் கண்ணீரில்
நிரம்பி வழிவதும்
நம் காதலே
உனக்காக
அழும் போதும்
💖 பக்கம் 463 / 478
📋 Copied