பணிக்காற்று குளிரும் இரவின்
இருளும் என்னை தனிமையாக்கிய
போதெல்லாம் நீயும் நானும்
நிலவின் நிழலில் கட்டி
அணைத்தபடிநின்ற நினைவுகள்
என்னை தேற்றுதடி
இதய துடிப்பை
மாற்ற முடியாத ஒரே உந்துதல்
கண்ணில் மறைந்த காதல் விழிகள்
நிஜமாய்
முன் செல்கிறேன்
நிழலாய்
பின் தொடர்ந்து வா
இடைவெளிகள் நம்மை
இணைத்தே வைக்கும்
காத்திருக்கும் கண்களில்
தேங்கி கிடக்கும்
கனவுகளை உனையன்றி
யாரறிவார் என்னுயிரே
காதல் மனதை பிடிக்காது
அது மெதுவாக வசிக்கத் தொடங்கும்
உன் நினைவில் உருகி
உன் ஸ்பரிச
மோகத்தில் தொலைகிறேன்
இதுவே காதல் 🔥❤️
உன் காதல்
எனக்கு சொந்தமானது
என்று நினைக்கும்
ஒவ்வொரு கணமும்
வாழ்க்கையின்
மிகப்பெரிய சுகம்
ஏக்கம் கொண்ட
மனதிற்கு ஏமாற்றமே
நிரந்தரம் ஆகிறது
நீ இல்லாத நேரத்தில்
உன் விரல்களில்
தான் எத்தனை
வித்தைகள்
கற்று கொடு
கொஞ்சம்
நான் வீணையும்
வாசிக்க
காதல் என்பது
ஒரு உணர்வு அல்ல
உன்னுடன் வாழும்
ஒவ்வொரு நொடியும்
💖 பக்கம் 451 / 478
📋 Copied