மொழியறியா
காற்றும்
கவி பேசுது
உன் வருகை
அறிந்து

வானவில்லாய் நீ
வந்தாய்
வண்ணமானது
வாழ்க்கை

நாட்கள் மாறலாம்
மாதங்கள் மாறலாம்
வருடங்கள் மாறலாம்
உன்னென் தோற்றங்களும்
மாறலாம் மாறாதே
என்றும் நானுன்
மீது கொண்ட காதல்
என் காதல் கணவா

இரவின் மௌனத்தில்
பெயரும் பெயர் தான்
காதலின் தூக்கம்

இரவில் நம் உதடுகள்
பேசும் மொழியை
பகல் கூட புரிய முடியாது

எல்லா இடத்திலும் தேடிப்பார்
என்னை விட உன்னை நேசிக்கும்
ஒருத்தரை உன்னால் ஒருபோதும்
கண்டு பிடிக்க முடியாது

மைனாக்கள் கூட
உன்னிடம் கூடு கட்ட
கற்றுக்கொள்ள ஆசை
படுகிறதடி மங்கை நீ
கூந்தல் கட்டும்
அழகை பார்த்தபின்

மனதிலும் தாகம்
ருசிப்பதா ரசிப்பதா
என்று உனையும்

மழை நனைக்கும்
மண்வாசனை போல
காதல் மனதை பூர்த்தி செய்கிறது

கண்களுக்குள்
மாயங்கள் செய்கின்றாய்
பார்வையில் சிக்காமல்