கவிதை எதுவும்
தோணவில்லை
நான் ரசிக்கும்
கவிதை
அருகிலிருப்பதால்
நினைவுகள் வந்தால்
இதயம் சிரிக்கும்
மறைந்தால் சுவாசமே மாறுகிறது
விழித்ததும்
விழியோரம்
நீ என்
விடியலாய்
விழிகள் பேசும் மொழியில்
ஆயிரம் வருடங்களின்
காதலைக் கேட்கிறேன்
அன்பெனும் பிடிக்குள்
சிக்குண்ட கரங்கள்
விடுவிக்க நினைத்தாலும்
விடுபடாது
கை நெருங்கும் நொடியில்
இதயம் தன் வேகத்தை
மறந்து விடுகிறது
காத்திருப்பது கண்கள் மட்டும்
அல்ல இதயமும் தான்
கண்கள் உன்னை தேடி
இதயம் உன் அன்பை தேடி
விடைப்பெறட்டும் நாணம்
விடைத்தருகிறேன் நானும்
உன் பார்வையின் கேள்விக்கு
காதலர் தின வாழ்த்துகள்
பார்வையில் பிறக்கும் நொடி
ஆயுள் முழுவதும் உயிர்க்காற்றாகிறது
மௌனம் பேசும் நேரத்தில்
இதயம் தன் ரிதமைக் கண்டது
💖 பக்கம் 41 / 478
📋 Copied