மனதுக்குள் நினைத்தால்
என் முன் வந்து
விடுகிறாயே
நீயும் எனக்குள்
தான் எப்போதும்
இருக்கின்றாயா
மனதுக்குள் நினைத்தால்
என் முன் வந்து
விடுகிறாயே
நீயும் எனக்குள்
தான் எப்போதும்
இருக்கின்றாயா
கண்மூடினால்
காட்சியாகிறாய் நீ
இருளில் நிலவாய்
இதழ்கள் பேசாத உணர்வுகளை
பார்வைகள் எல்லாம்
சொல்லிக்கொள்கின்றன
பற்றி கொண்ட
கரப்பிடிக்குள்
பத்தி கொல்(ள்)கிறது
காதல் தீயும் அனலாய்
சில நேரங்களில்
சிக்கிக்கொள்கிறேன்
சிந்தனைக்குள்
நீவரும் போது
அன்பு எவ்வளவு அழகானது
என்று உள்னிடம் அறிந்தேன்
அன்பு எவ்வளவு வலிகள
தரும் என்பதையும்
உன்னிடமே அறிந்தேன்
நெற்றியில் நீ கொடுக்கும்
முத்தத்தோடு உன் மூச்சுக்
காற்றையும் சுவாசிக்கிறேன்
என் உயிர் காற்றாய்
இமை கதவுகள்
மூடியதும் விழிவீட்டினுள்
நுழைந்துவிடுகிறாய்
கனவாக...
இதயத்தின் துடிப்பில்
காதலின் ராகம் ஒலிக்கிறது
வாசல் புன்னகைக்கும் முன்
இதயம் கதவுகள் திறக்கிறது