வெள்ளை காகிதத்தில்
வெறுமையாய்
கிறுக்கி கொண்டிருந்த
எனையும் ரசனையாய்
எழுத வைத்தது நீ
என்மீது கொண்ட
காதல்

நீ என்னோடு
தான் இருக்கிறாய்
நானாக

தோளில் சாய்ந்து
உருகும் கணம்
ஆயிரம் பிரபஞ்சங்களை
மறந்து விடும்

கண்கள் சந்தித்த தருணம்
ஒரு கவிதைதான்
ஆனால் அது முடிவற்ற
நாவல் ஆனது நாளடைவில்

இதயம் தூங்கும்
நேரத்தில் கூட
அவளின் நினைவு விழித்திருக்கும்

ண்கள் மட்டும் பேசும் போது
பேச வேண்டிய வார்த்தைகள்
சிகிச்சை பெறுகின்றன

உன் தாமதத்தில்
என்னிதயமும்
அதிவேகமாய் துடிப்பதை
அறிவாயா வந்துவிடு
இதயமும் நேர் கோட்டில்
பயணிக்கும்
முன் என்னன்பே

அழுத்தமாய் பிடிக்கப்பட்ட
விரல்களில்
வெடிக்கின்றது மனக்கிளர்ச்சி

என் இதயத்தில்
வீற்றிருக்கும்
உனக்காகவே
என் ஆலாபனைகளும்
என்னவனே

மழையில் நடக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஒரு காதல் கவிதை