பருகப் பருக
தீராத காதல்
நீ என் கண்களில்
காதலா

மலையிடம் பேச
தென்றல்
மழையிடம் பேச
மின்னல்
மலரிடம் பேச
வண்டு
என் மனதிடம் பேச
நீ

கல்யாணம் முடியும் வரை
செய்வதல்ல காதல்
கண்மூடி சாகும் வரை
செய்வதே காதல்
காதலர் தின வாழ்த்துக்கள்

பயணித்த
அழகிய வழியை
திரும்பி பார்கிறேன்
இன்று அதில்
வலிகள் மட்டுமே
எஞ்சியிருக்கு

ஒரு முறையேனும்
வீழ்த்திட வேண்டும்
நானுனை ஜெயித்திட
விழி போரில்

கடந்தவை திரும்பாது
ஆனால்
நீ திரும்பி
பார்க்க வைக்குறாய்
மனதை கடத்தி

கண்ணில் நீ
நெஞ்சில் நீ
கனவிலும் நீ
நீயே என் வாழ்வின் ஒளி

மழைச்சாரலாய்
நீவர கவிச்சோலையானேன்
நான்...!

எந்த வார்த்தையும் தேவையில்லை
உன் கண்கள் பேசும் மொழியைத்தான்
என் இதயம் உணர்ந்து விடும்

நிமிடங்களென்ன
நீண்ட காலமென்றாலும்
காத்திருப்பேன்
எதிர் பார்த்திருப்பேன்
நீள்வது உன்னினைவென்றால்
உனக்காக