கண்களுக்கும்
சிவ ராத்திரி
உன் மௌனத்தால்

மௌனத்தில் தவழும்
அந்த நொடி
இதயத்தை தீயாக்கும் ரகசியம்

உன் பெயர்
ஒவ்வொரு முறை
உச்சரிக்கும்போதும்
என் இதயம் இசைக்கிறது
காதலின் ராகம்

சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்

கைகளின் ஒற்றைத் தொட்டில்
உயிர்கள் கூடிய இசை ஒலிக்கிறது

பிரம்மித்து போகிறேன்
உன் மௌனத்திலும்
இத்தனை காதலா என்று

நீ சென்ற வழியில்
பூவும் வாசம் கூட
நின்று பார்க்கும்

சட்டென்று அணைத்து கொள்ளும்
அந்த நொடி
இந்த உலகத்தை
மறந்து விட வைக்கும்

நேசிப்பது காற்று போன்றது
அதை தெளிவாக
காண முடியாது
ஆனால் உணர முடியும்

சுவாசத்தில்
வரைபடம் இல்லாமல்
பயணிக்கிறது
அவளின் வாசனை