சென்றபோதும் தங்கிவிட்டாய்
மனதில் வந்த
வழியை பார்த்து
ரசிக்கிறது விழியும்
மீண்டும் வருவாயென
அவளது சிரிப்பில்
பதுங்கி இருந்தது
என் அமைதியின் அர்த்தம்
உன் உதடுகள் கவிதை எழுத
என் விரல்கள் இசை மீட்ட
இருவரும் சேரும் போது
காதல் தீயாக எரிகிறது
ஒரு பார்வை
பூமியை மறக்கும் அளவுக்கு
மனதை அழகுபடுத்தும்
மொட்டில்லா
மெட்டியிலும் மெல்லிசை
உன் கரம்
பட்டதால்
சுவர் இருந்தாலும்
சுவாசத்தில் ராகம் உண்டாகிறது
அது காதலின் ராகம்
நீ மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்
மாலை நேரத்தின் சிவந்த ஒளியில்
இரு இதயங்கள் சொல்லாமல்
ஒருவரை ஒருவர்
உணர்ந்து உருகுகின்றன
முகவுரை
நீ என்பதால்
முடிவுவரை
சுபம் என்றே
ரசித்து
கொண்டிருக்கின்றேன்
வாழ்க்கை
எனும் புத்தகத்தை
மௌனமாக
கூச்சலிடும் கண்கள்
காதலின் உண்மையான மொழி
💖 பக்கம் 38 / 478
📋 Copied