காதலிக்க படுவதும்
வரமே
நீயென் வரம்

வாழ்க்கை
வெறும் கனவோ
என்றிருந்தேன்
நீயும் வந்தாய்
கலையாத
வண்ண கனவாய்

கண்ணின் வலியில்
புன்னகை மறைந்தால்
ஆசையின் அடையாளம்
தெளிவாகும்

மண்ணில்
மறைந்திருக்கும் வேராய்
என்னுள்
உறைந்திருக்கும் நீ

பாசத்தின் தொடுதல்
காற்றில் கூட
உணர முடிகிறது

சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்...!

தூரத்தில் இருந்தாலும்
அருகிலேயே வாழ்கிறாய்
நினைவுகளாக

சில அணைப்புகள்
உலகத்தை மறக்கச் செய்கின்றன

இதயத்தின் இருள்
தெருவில் நீயே
ஒளி பாயும் விளக்கு

தொட்ட பின்
விரல்களில் தான்
ராகம் உணர்ந்தது