ஒரு பார்வை மட்டுமே போதும்
இதயம் முழுக்க ஓர் கவிதை எழுவதற்கு
புன்னகை ஒரு பார்வை
வாழ்வை முழுதும்
உருக்கக் கூடியது
தேகம் அருகில் வந்ததும்
ஆசை தன் எல்லையை மறக்கிறது
நினைக்க
மறந்த நொடியிலும்
ஏதோவொரு செயல்
உன்னை......
ஞாபகப்படுத்தியே
செல்கின்றது
அருகில் இல்லையென்றாலும்
உள்ளத்தில் இடம் பிடித்திருப்பதே
அன்பின் சக்தி
என் இரவு
நீயானால்
வெண் நிலவும்
மறைகிறது
விரைவாக
நான் உறங்காமலேயே
கண்கள் பேசாமல் இருந்தாலும்
பார்வையில் காதல்
முழுக்க எழுதப்பட்டிருக்கும்
காதலின் மௌனம் கூட
என் இதயத்துக்கு
ஒரு மழை போல் இருக்கிறது
நெருக்கம் சொல்லிக்கொள்வதில்லை
அது தோள்மீது சாயும்
ஒரு மௌனமான அழுத்தம்
கண்முன்
வந்து நிழலாடும்
உன் பிம்பத்திடம்
தாவிக் கொ(ல்)ள்கிறது
மனமும்
நீ சென்ற பின்பும்
💖 பக்கம் 377 / 478
📋 Copied