நாள்தோறும் சூரியன்
உதிக்கிறதுபோல்
என் காதலும்
உன்னைக் காணும்
ஒவ்வொரு முறையும்
புதிதாக உணர்கிறேன்
தொட்ட இடம் கருகும்
ஆனால் அந்த வலிக்கே
என் காதல் அடையாளம்
அன்பு சொல்ல முடியாதது
உணர முடிந்தால் போதும்
மௌனமாக இருக்கும்போது கூட
மனசு முழுக்க ஓர் இம்சை
காதலின் பெயரால் நடக்கிறது
பார்வைகள் சந்திக்கும் தருணம்
நேரம் கூட சுவாசம் பிடித்து நிற்கிறது
சுதியோடு இசைக்க
காத்திருக்கு
சலங்கையும்
உன் ரசனைக்காய்
நீ வருவாய் என
தோளில் சாயும்
அந்த மென்மையான நிமிடம்
வானில் பறக்கும்
ஒரு கனவுப் போலிருக்கும்
பலமுறை
முயற்சித்தும்
தோற்றுப்போனேன்
வீணையை மீட்ட....
உன் நினைவுகளென்னை
மீட்டிக்கொண்டிருப்பதால்
காற்றுக்கும்
கற்றுக்கொடுத்து
விட்டாயா....
கூந்தல்
கலைத்து
விளையாட
உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு
ஆயுள் முழுவதும்
ஆக்ஸிஜன் இன்றி
வாழ்கிறேன் உன்னுடன் நான்
💖 பக்கம் 376 / 478
📋 Copied