ஏதோ
ஒரு நினைவு
விழிகளை
நனைக்கும்
போதெல்லாம்
புன்னகையுடனேயே
கடந்துவிடுகின்றேன்
அந்நொடியை
நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்
பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியாத பந்தம்
தவிர்க்க முடியாத உயிர்
அனைத்துமே உன் அன்பு மட்டுமே
ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட
பார்வைதான்
முதலில் காதலிக்கிறது
இதயம் அதன்
பின்னாளில் மட்டுமே
ஒப்புக்கொள்கிறது
இமைகள் கொண்டு
சிறை பிடித்து
விட்டேன் உனை
கனவு கலைந்தாலும்
நீ கண்களிலிருந்து
தப்பிவிடாதிருக்க
மௌன
கவிதை நீ
ரசிக்கும்
ரசிகை நான்
சிறு சலசலப்பும்
எனை ஏமாற்றுகிறது
உன் வருகையோயென
நினைக்க வைத்து
மனமும்
குழந்தை தான்
உன்னையே
நினைப்பேன்
என்று பிடிவாதம்
பிடிப்பதில்
இதயம் தேர்ந்தெடுத்த
உணர்வு தான்
வாழ்க்கையை
மென்மையாக நடத்துகிறது
💖 பக்கம் 374 / 478
📋 Copied