விழியில் பேசாதே
என் வார்த்தைகளும்
வழி மாறி தவிக்குதே

நிலை நின்ற கண்களில்
செய்திகள் வந்தன
மௌனமாக நெஞ்சோடு
நீ யிருக்கிறாய் என்று

அன்பில் உருவான
உறவு கணவன்
மனைவி உறவு

கண்களில்
கலந்தாய்
காதலில்
கரைந்தேன்

உன் அடிமையாய்
நானும்
என் அரசனாய்
நீயும்

சண்டைகளால் காதல்
இன்னும் வலிமையானது

அழுத்தம் இல்லாமல்
அவளின் சுவாசமே
மனதை கிறுக்கிய ராகம்

புதைந்து போகிறது
என் கோபங்களும்
உன் காதலின் ஆழத்தில்

என் தேடல்களில்
எப்போதும் முதலிடம்
உன் நினைவுகளுக்கே...

மொத்த உசுரயும்
எடுத்து விட்டு
கலைக்கிறாய்
மௌனத்தை
இந்த ஒத்த
உசுரு வாழ்வது
உனக்கென்று
உணராமல்